திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உயிரிழந்த கணவரின் உயிரணுவில் இருந்து குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி; 2 பிள்ளைகளும் விபத்தில் இறந்ததால், 61 வயதில் பெண் முடிவு.!
ஆஸ்திரேலியா நாட்டினை சேர்ந்த 62 வயது பெண்மணி, தனது கணவருடன் வசித்து வருகிறார். தம்பதிகளுக்கு 31 வயதுடைய மகனும், 29 வயதுடைய மகளும் இருக்கின்றனர். கடந்த 2019ம் ஆண்டு தம்பதியின் மகன் விபத்தில் உயிரிழந்துவிட, 29 வயது மகள் மீன்பிடிக்க சென்றபோது பலியாகினர். இதனால் தனிமையில் தம்பதிகள் வாடி வந்துள்ளனர்.
இதனிடையே, கடந்த டிசம்பர் 21ம் தேதி பெண்ணின் கணவர் உயிரிழந்துவிட, அவரின் விந்தணுவை வைத்து சந்ததியை பெருக்க அவர் திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக தனியார் மருத்துவமனையில் கணவரின் உடலை எடுத்துச்சென்று, மருத்துவர்களிடம் விபரத்தை தெரிவித்துள்ளார்.
ஆனால், மருத்துவர்கள் அதற்கான அனுமதியை மறுத்துவிட்டு, உடலை பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக அவசரகால மனுதாக்கல் செய்த பெண்மணி, 2 நாட்களில் தனது முடிவில் வெற்றியை கண்டுள்ளார்.
பின் நீதிமன்றத்தின் அனுமதிப்படி பெண்ணின் கணவரது விந்து சேகரிக்கப்பட்டது. விரைவில் வாடகைத்தாய் மூலமாக கருமுட்டை தானம் பெறப்பட்டு, குழந்தையை பிறக்க வழிவகை செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த தீர்ப்பின் முடிவால் பெண்ணும் மகிழ்ச்சி அடைந்தார்.
பெண்ணின் வேண்டுகோளுக்கேற்ப அவரின் அடையாளம் மறைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதுதான் ஊடகங்களுக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இத்தகவல் தற்போது தெரியவந்துள்ளது.