#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி! பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்! வெளியான அதிர்ச்சி சம்பவம்!
சவுதி அரேபியாவில் வசித்து வந்த,18 மாத குழந்தையான அப்துல் ஆசிஷ் ஆல் குபான்க்கு அதிக உடல் வெப்பநிலை இருந்தநிலையில், அவரது பெற்றோர்கள் அங்கிருக்கும் ஷாக்ரா பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது மாதிரிகளை எடுப்பதற்காக, மூக்கினுள் விடப்படும் ஸ்வாப் குச்சியை மருத்துவர்கள் குழந்தையின் மூக்கில் விட்டுள்ளனர். இந்நிலையில் குச்சி உடைந்து மூக்கிலேயே சிக்கியுள்ளது. அதனை தொடர்ந்து குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தக் குச்சியை வெளியில் எடுப்பதற்காக மருத்துவர்கள் குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். பின்னர் குழந்தை தனது சுயநினைவை இழந்துள்ளது. இதையடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் குழந்தை உயிரிழந்தது.
இதுகுறித்து குழந்தையின் தந்தை அப்துல்லா அல் ஜவுபான் கூறுகையில், குழந்தைக்கு மயக்க மருந்தை கொடுக்க மறுப்பு தெரிவித்தேன். ஆனால், மருத்துவர்கள் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, குழந்தையை குழந்தைநல மருத்துவர் பரிசோதனை செய்ய வேண்டுமென கூறியபோது, மருத்துவமனை நிர்வாகம் சிறப்பு மருத்துவர் விடுப்பில் இருப்பதாக கூறினர்.
இந்நிலையில் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைவதாக உணர்ந்தநிலையில் குழந்தையை வேறு சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்டு கிளம்பியபோது, ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதற்கிடையே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என வேதனையுடன் கூறியுள்ளார். மேலும் குழந்தையின் சிகிச்சையின் போது, மருத்துவர்கள் நிலைமையை தவறாக கையாண்டது தொடர்பாக குழந்தையின் தந்தை வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், விரைவில் விசாரணை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.