மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பப்ஜி டிக் டாக் செயலிகளுக்கு தடை... தலீபான் அரசு அதிரடி உத்தரவு..!
ஆப்கானிஸ்தானில் பப்ஜி, டிக்டாக் செயலிகள் தடை செய்யப்படும் என்று தலீபான் அரசு அறிவித்துள்ளது.
காபூல், ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை பிடித்தனர். அதன் பிறகு அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தலீபான் அரசு விதித்து வருகிறது. மேலும் பல்வேறு இணையதளக்களுக்கும் தலீபான்கள் தடைகள் விதித்துள்ளனர். இதுவரை 23.4 மில்லியன் இணையதளங்கள் ஆப்கனில் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதே தளங்கள் மீண்டும் புதிய பெயர்களில் தொடங்கப்படுவதாக அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் டிக்டாக் மற்றும் பப்ஜி செயலிகளை தடை செய்யப் போவதாக தலீபான் தலைமையிலான தொலைத்தொடர்பு துறையின் அறிவிப்பின் மூலம் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
எனவே 90 நாட்களுக்குள் ஆப்கானிஸ்தானில் டிக்டாக் மற்றும் பப்ஜியை தடை செய்ய முடிவு செய்த பாதுகாப்பு துறையின் பிரதிநிதிகள் மற்றும் ஷரியா சட்ட அமலாக்க நிர்வாகத்தின் பிரதிநிதியுடனான சந்திப்பில் தலீபான் அரசு தடையை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆப்கானிஸ்தானின் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்கள் தடை தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். மேலும் குறித்த காலத்திற்குள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.