மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: பேருந்து குளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்து.. 17 பேர் பலி, 35 பேர் படுகாயம்; கண்ணிமைக்கும் நேரத்தில் சோகம்.!
வங்கதேசம் நாட்டில் உள்ள சட்டகண்டா பகுதியில் இருந்து 60 பயணிகளை ஏற்றுக்கொண்ட பேருந்து, அங்குள்ள பரிசில் - க்ஹுளா பகுதியில் பயணம் செய்தது.
அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த குளத்தில் தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பலரும் பேருந்துக்குள்ளேயே சிக்கிக்கொண்டனர்.
மக்கள் பதற்றத்தில் செய்வதறியாது திகைத்த நிலையில், உள்ளூர் மக்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர், 35 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து உள்ளூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.