வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான முழு அடைப்பு போராட்டம்: 12 பேருந்துகள் தீவைத்து எரிப்பு.!



Bangladesh Opp party Protest 12 Bus Fired 

 

வங்காளதேசத்தில் எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சியின் சார்பில் 2 நாட்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, நேற்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

புதன்கிழமை காலை 6 மணிமுதல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிவரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்பதால், வங்கதேச மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது முடங்கி இருக்கிறது. 

வங்கதேச பிரதமர் ஷேக் ஹுசைனா பதவி விலகச்சொல்லி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போராட்டத்தின் எதிரொலியாக கடந்த 24 மணிநேரத்தில் 12 பேருந்துகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. 

சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.