மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: பயணிகளை ஏற்றிவந்த கப்பல் நீரில் மூழ்கி விபத்து; 24 பேர் பரிதாப பலி., 25 பேர் நிலை என்ன?..!
கப்பலில் அளவுக்கு அதிகமாக மக்கள் ஏறி பயணம் செய்ததால், நடு ஆற்றில் நீரில் மூழ்கி 24 பேர் பலியாகியுள்ளனர். 25 பேர் நிலை தெரியவில்லை.
பங்களாதேஷில் உள்ள போடா நகர், கரோடோவா ஆற்றில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை கப்பல் ஏற்றிக்கொண்டு பயணம் செய்துள்ளது. இந்த கப்பலில் பழமையான கோவிலாக செல்ல இந்து மதத்தை சேர்ந்தவர்கள் திரளாக பயணம் செய்துள்ளனர் என்ற உள்ளூர் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தனது அதிகபட்ச வரம்பை விட கூடுதலான எடையை கப்பல் ஏற்றுக்கொண்ட காரணத்தால், ஆற்றில் படகு செல்லும் போது கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், கப்பலில் பயணம் செய்த 24 பேர் நீரில் மூழ்கி தத்தளித்து பலியாகினர். மேலும், 12 க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், ஆற்றில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 24 பேர் பேர் பலி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 25 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படடுத்தியுள்ளது.