மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
31 வருடம் கழித்து, அவமானப்படுத்திய ஆசிரியரை 100 முறை கத்தியால் குத்திக்கொன்ற மாணவன்..!
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர் குண்டர் உவெண்டஸ் (வயது 37). கடந்த 1990 ஆம் வருடம் அவருக்கு 7 வயதாக இருக்கும் போது, மரியா வெல்லிங்டன் என்ற ஆசிரியரிடம் கல்வி கற்று வந்துள்ளார். அதாவது, குண்டர் பயின்று வந்த பள்ளியில் ஆசிரியராக மரியா வெல்லிங்டன் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, ஆசிரியர் மாணவனை அடித்து அவமானப்படுத்திய கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் கடும் கோபமடைந்த குண்டர், கடந்த 30 வருடங்களாக காத்திருந்து கடந்த வருடத்தில் ஆசிரியரை 100 முறை கத்தியால் குத்தி கொலை செய்து பழிதீர்த்துள்ளார்.
ஆசிரியர் கொலை வழக்கில் காவல்துறை குற்றவாளியை தேடி வந்த நிலையில், எந்த தடயமும் கிடைக்காததால் வழக்கு தொய்வடைந்துள்ளது. குண்டர் சமீபத்தில் தனது நண்பரிடம் ஆசிரியர் கொல்லப்பட்டது தொடர்பாக தெரிவிக்கவே, அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணை நடத்திய காவல்துறையினர் குண்டரை கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், 7 வயது இருக்கும்போது ஆசிரியர் என்னை அடித்து அவமானப்படுத்தியதற்காக பழி வாங்கும் பொருட்டு இந்நடவடிக்கை எடுப்பதாக கூறி அதிர வைத்துள்ளார்.