மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துனிசியாவில் படகு கவிழ்ந்த விபத்து..10 பேர் மாயம்.. 5 ஆப்பிரிக்கர்கள் உயிரிழப்பு..!
வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் போர் மற்றும் வறுமையின் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் கடல் வழியாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மத்திய தரைக்கடலை கடந்து இத்தாலிக்கு செல்ல முயன்ற ஆப்பிரிக்க அகதிகள் ஸ்பாக்ஸ் பிராந்தியம் அருகே படகில் சென்ற போது பாரம் தாங்காமல் படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த கடலோர காவல் படையினர் கடலில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 20 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும் மாயமான 10 பேரை மீட்கும் முயற்சியாக தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 5 ஆபிரிகர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.