மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீர் வெடி விபத்து., சிதறிப்போன 4 மாத குழைந்த உட்பட 10 உயிர்கள்!!
டொமினிகன் குடியரசின் தலைநகரில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காணாமல் போன 13 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த திங்கட்கிழமை அன்று சான் கிறிஸ்டோபல் என்னும் நகரில் சந்தை பகுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இயங்கி வரும் பேக்கரி ஒன்றில் திடீரென யாரும் எதிர்பாராத வித சமயமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அருகில் இருந்த ஹார்டுவேர் மற்றும் பர்னிச்சர் போன்ற கடைகளுக்குள் தீ வேகமாக பரவத் தொடங்கியது. இந்த விபத்தில் நான்கு மாத குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 11 பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.