விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 18 வயது சிறுவன்.! ஏன்? நடந்தது என்ன? அவரே உடைத்த உண்மை.!



boy-talk-about-the-reason-why-he-blackmailed-flight-bla

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 18 வயது நிறைந்த செஸ் விளையாட்டு வீரரான ஆதித்யா வர்மா என்பவர் சமீபத்தில் விமானம் ஒன்றில் பயணம் செய்துள்ளார். அப்பொழுது அவர் தனது நண்பர்களுக்கு, நான் தாலிபான் அமைப்பை சேர்ந்தவன். விமானத்தை வெடிக்க வைக்க போகிறேன் என மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்த தகவலை அறிந்த போலீசார் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து ராணுவத்திற்கு தெரியப்படுத்தப்பட்டு, இரு போர் விமானங்கள் அனுப்பப்பட்டு, பயணிகள் விமானம் தரையிறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பயணிகளின் உடமைகள் சோதனைக்குள்ளானது. சிறிது நேரத்தில் அந்தத் தகவல் போலி என தெரியவந்ததை தொடர்ந்து ஆதித்யா வர்மா கைது செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

flight

அதனைத் தொடர்ந்து தற்போது ஆதித்யா வர்மா ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்த சம்பவம் குறித்து ஆதித்யா வர்மா மௌனம் கலைத்துள்ளார். அவர் கூறியதாவது, நான் சற்றும் யோசிக்காமல் பைத்தியக்காரத்தனமான செய்த செயல், ஒரு வேடிக்கைக்காகதான் அதை செய்தேன். ஆனால் பெரும் பிரச்சினை ஆகிவிட்டது. என்னால் உருவான பிரச்சினைக்காக மிகவும் வருந்துகிறேன். 

நான் விமானத்தில் பயணம் செய்த யாரையும் பயமுறுத்துவதற்காக அவ்வாறு செய்யவில்லை என கூறியுள்ளார். நான் விளையாட்டாக எனது நண்பர்களுக்கு விமானத்தை வெடிக்க செய்யப் போகிறேன் என மெசேஜ் அனுப்பினேன். அவர்கள் விமான நிலைய வைஃபையை பயன்படுத்தியதால் உடனே இந்த தகவல் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றுள்ளது. இந்த செயலுக்காக தான் வருந்துவதாக அவர் கூறியுள்ளார்