53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
கொட்டித்தீர்த்த பேய்மழை; 55 பேர் பலி., வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 74 பேர் மாயம்!
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டிஜெரிண்ட் மாகாணத்தில் நேற்று திடீரென கடுமையான பேய் மழை கொட்டித்தீர்த்தது. அர்ஜென்டினா மற்றும் உருகுவே நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள இம்மாகாணத்தில் நதிகள் ஏராளமாக இருக்கின்றன.
இதனால் மழைக்காலங்களில் இம்மாகாணம் கடுமையான சேதத்தையும் சந்திக்கும். இந்நிலையில், நேற்று பெய்த மழையின் காரணமாக அம்மாகாணத்தின் பல நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது.
வெள்ளத்தின் பிடியில் சிக்கி 74 க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருக்கின்றனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 69 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 55 பேரின் மரணம் தற்போது வரை உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
Awful images are still coming out from Rio Grande do Sul, Brazil where 57 people have died and a further 373 are missing due to the ongoing catastrophic flooding....pic.twitter.com/p1DJxgq296
— Volcaholic 🌋 (@volcaholic1) May 5, 2024