திருமணத்திற்கு மணப்பெண் வரவில்லை! கடைசி நொடியில் மணமகன் செய்த காரியம்! வைரல் வீடியோ



Brazil man married him self viral photos and videos

திருமணம் நிச்சயிக்கப்பட்ட தேதி அன்று மணப்பெண் வராத நிலையில் மணமகன் தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது.

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் 33 வயதாகும் ரபேலோ. இவருக்கும் இளம் பெண் ஒருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்த சில மாதங்களில் மணமக்கள் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

Mysterious marriage

மணமகள் தன்னை பிரிந்துசென்றாலும், நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணத்தை நடத்தியே தீரவேண்டும் என முடிவு செய்துள்ளார் மணமகன். இந்நிலையில் திருமண நாளும் வந்துள்ளது. ஆனால் மணமகள் வரவில்லை. இதனை அடுத்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மணமகன் தன்னைத்தானே திருமணம் செய்துகொண்டார்.

மிகவும் வினோதமாக நடந்த இந்த திருமணத்தின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.