மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறையில் இருந்து தப்பிக்க கைதி செய்த தில்லாலங்கடி வேலையை பார்த்தீர்களா.! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
பிரேசில் நாட்டில் கிளாவினோ டா சில்வா என்ற நபர் போதை பொருள் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கிளாவினோவிற்கு 19 வயதில் மகள் ஒருவர் உள்ளார். அவர் தனது தந்தையை காண அடிக்கடி சிறைக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் கிளாவினோ சிறையில் இருந்து தப்பிக்க எண்ணி, தனது மகளைப் போலவே முகத் தோற்றத்தை மாற்றி இளம்பெண் போல உடையணிந்து சிறையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அவரது நடவடிக்கைகளை உற்று நோக்கி கவனித்த போலீசார் கிளாவினோவை தப்பிக்க முடியாமல். மடக்கி பிடித்து தனி சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள நிலையில், பார்ப்பவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.