மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மணமேடைக்கு வந்த முன்னாள் காதலன்.. சட்டென மணப்பெண் செய்த காரியம்.. அமைதியான திருமண வீடு... வைரல் வீடியோ..!
தனது திருமண நிகழ்ச்சிக்கு வந்த முன்னாள் காதலனை மணப்பெண் மேடையில் வைத்து கட்டிப்பிடித்த வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்தோனேஷியா நாட்டில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் புதுமண தம்பதிகள் வரவேற்பு மேடையில் நின்றுகொண்டிருந்தபோது மணப்பெண்ணின் முன்னாள் காதலர் மணப்பெண்ணிற்கு வாழ்த்து கூறுவதற்காக மேடைக்கு வந்துள்ளார். மணமேடைக்கு வந்த அவர் மணப்பெண்ணிற்கு கை கொடுத்தபோது மணப்பெண் அதனை தவிர்த்துள்ளார்.
பின்னர் தனது அருகில் நின்றுகொண்டிருந்த தனது கணவரிடம் தனது முன்னாள் காதலனை கட்டிபிடிக்கவேண்டும் என மணப்பெண் அனுமதி கேட்க, அதற்கு அவரது கணவரும் அனுமதி வழகுகிறார். பின்னர் தனது முன்னாள் காதலனை மணப்பெண் கட்டிப்பிடிக்கிறார்.
இந்த காட்சியை மணப்பெண் வீடியோவாக இணையத்தில் வெளியிட தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த காட்சியை பார்த்த பலரும் மணப்பெண்ணிற்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டாலும், சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ காட்சி.