மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
330 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. 11 பேர் துடிதுடிக்க மரணம், 34 பேர் படுகாயம்..!
330 அடி செங்குத்தான பகுதியில் பேருந்து கவிழ்ந்து 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமா நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென 330 அடி செங்குத்தான பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து பள்ளத்தாக்கில் பேருந்து பலமுறை உருண்டதால் பேருந்து முழுவதுமாக உருக்குலைந்து போனது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பின் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் பலத்த காயமடைந்த 34 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.