#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இனி பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் விளம்பரங்களுக்கு பாய் பாய்.. மெட்டா அறிவித்துள்ள புதிய திட்டம்.!
இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் தங்கள் நேரங்களை செலவிடும் சமூக வளையதளங்களில் முக்கியமானதாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் திகழ்கிறது. இச்செயலிகளை நாம் உபயோகிக்கும் போது வரும் விளம்பரங்களை நம்மால் தடுக்க இயலாது.
இதற்காகவே மெட்டா நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி மாத சந்தா செலுத்துவதன் மூலம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை விளம்பரம் இல்லாமல் அனைவராலும் உபயோகிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இதன் முதற்கட்ட சோதனையின் அடிப்படையாக ஐரோப்பிய யூனியனில் மட்டும் விளம்பரம் இல்லாத பேஸ்புக் மற்றும் விளம்பரம் இல்லாத இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது விரைவில் எல்லா நாடுகளுக்கும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே டிக் டாக் இதுபோல மாத சந்தா திட்டத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.