#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
புற்றுநோய் தடுப்பூசி தயாரிப்பில் புதிய திருப்புமுனை; விரைவில் புற்றுநோய்க்கு தடுப்பூசி அறிமுகம்.!
அமெரிக்காவில் இருக்கும் Bethesda நகரில் தேசிய புற்றுநோய் மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் தயாரிப்பு பணியில் விஞ்ஞானிகள் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தடுப்பூசி ஆராய்ச்சி மையத்தில் தற்போது புற்றுநோய்க்கான தடுப்பூசி விஷயத்தில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி மருத்துவர் ஜேம்ஸ், புற்றுநோய் சிகிச்சை முறைகள் பெரிய முன்னேற்றம் தடுப்பூசியாக அமையப்போகிறது என தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக வரையறுத்துள்ள வெற்றிக்கு பின்னர் தடுப்பூசி உருவாக்கம் ஆராய்ச்சியில் திருப்புமுனை எட்டப்பட்டுள்ளது. அடுத்து ஐந்து ஆண்டுகளில் புற்று நோய்க்கான தடுப்பூசிகள் வரலாம். இவை நோயை தடுக்கும் பாரம்பரிய தடுப்பூசிகளாக இல்லாமல், நோய் கட்டிகளை உருவாக்கும் முறைகளை அழித்து, அதனை சுருக்கி புற்றுநோய் மீண்டும் வராமல் இருக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.