மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலகளவில் அசுரவேகத்தில் பரவும் குரங்கம்மை... மாநில அரசுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு..!
குரங்கம்மை நோய் தொடர்பாக மத்தியஅரசு, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.
ஜனவரி 1 முதல் இதுவரையிலும் 50 நாடுகளைச் சார்ந்த 3413 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்தவர்கள் ஆவார்கள். இந்த தொற்று உலகஅளவில் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தால் நோய்தொற்று தடுப்பு பணிகளை எடுத்துக்கொள்ள உலக சுகாதார அமைப்பு கோரிக்கை வைத்திருந்தது.
இதன் பேரில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வழிகாட்டு நடைமுறைகளை அனுப்பியுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கீழ்காணும் நடவடிக்கை எடுக்குமாறும், மாநில எல்லை மற்றும் நுழைவிடங்களில் கண்காணிக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் மாறுபட்ட நோய் இருக்கிறதா? என்று கண்டறியுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவைப்பட்டால் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.