திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கர்ப்பிணி விடுப்பில் சென்றால் நான் வேலை செய்யணுமா? - விஷம் கலந்த பெண் ஊழியரின் அதிர்ச்சி செயல்.!
சீனாவில் உள்ள ஹூபே மாகாணத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
இதனால் விரைவில் அவர் மகப்பேறுக்காக விடுமுறை எடுத்து வீட்டிற்கு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அவருடன் பணியாற்றி வந்த பெண் கர்ப்பிணிக்கு விஷம் கொடுத்துள்ளார்.
நீரில் பெண் மர்ம பொருள் கலந்து கொடுத்ததை சிசிடிவி கேமிராவில் கண்ட ஊழியர்கள், உடனடியாக கர்ப்பிணி பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, கர்ப்பிணி விடுப்பில் சென்றால் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதற்காக விஷம் கொடுத்து கருவை கலைக்க முயன்றதாக கூறி இருக்கிறார்.
இதுகுறித்து காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.