53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
இப்படியெல்லாம் கூட நிஜத்தில் நடக்குமா!!! திருமணத்திற்கு முன் மணமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! செம ட்விஸ்ட்..
சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு சீனாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது.
சீனாவின் ஜியாங்க்சு (Jiangsu) பகுதியில் வசித்துவரும் இளைஞருக்கும், இளம் பெண் ஒருவருக்கும் திருமணம் செய்துவைக்க இரண்டு வீட்டாரும் முடிவு செய்து அதன்படி திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றது. குறிப்பிடப்பட்டபடி திருமணம் நாளும் வந்தது.
இன்னும் சில நிமிடங்களில் தங்களுக்கு திருமணம் நடைபெறப்போகிறது என்ற மகிழ்ச்சியில் மணமகள் இருக்க, அப்போதுதான் அந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. ஆம், மணப்பெண்ணின் அருகில் நின்றுகொண்டிருந்த மாப்பிள்ளையின் தாயார், மணப்பெண்ணின் உடலில் இருந்த ஒரு மச்சத்தை பார்த்துள்ளார்.
அந்த மச்சத்தை பார்த்த அவர் கடும் அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி மணமகளின் குடும்பத்தாரிடம் மணமகளின் உண்மையான தாய், தந்தை யார் என்று விசாரித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பெண் குழந்தை சாலை ஓரம் ஆதரவின்றி நின்றதாகவும், அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்துச்சென்று தங்கள் மகளாக வளர்த்துவருவதாகவும் பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர்.
அதே 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் தனது பெண் குழந்தையை மணமகனின் பெற்றோர் தொலைத்து உள்ளனர். பெண்ணின் உடலில் இருந்த மச்சத்தை கொண்டு 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகள்தான் தற்போது மணமகளாக இருப்பது மாப்பிள்ளையின் தாயாருக்கு தெரியவந்துள்ளது.
உடனே மணப்பெண்ணும் தனது உண்மையான தாயாரை கட்டி அனைத்து கண்ணீர் சிந்தினார். இது ஒருபுறம் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தாலும், என்ன நடக்கிறது என புரியாமல் நின்றுகொண்டிருந்த மாப்பிளைக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
மணப்பெண் தற்போது மாப்பிளைக்கு சகோதரி என்பதால் இருவருக்கும் எப்படி திருமணம் செய்துவைப்பது என அங்கிருந்த அனைவரும் சிறிது நேரம் யோசித்தனர். அப்போதுதான் மாப்பிள்ளையின் தாயார் மேலும் ஒரு அதிர்ச்சியான தகவலை கூறினார்.
ஆம், 20 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மகள் காணாமல் போன பிறகு, ஒரு பையனை தத்தெடுத்து வளர்த்ததாகவும், அந்த பையன்தான் இந்த மாப்பிளை என கூற, அங்கிருந்த அனைவரும் சற்று ஆறுதல் அடைந்தார். பின்னர் முடிவு செய்தபடி தனது மகளை, தனது மகனுக்கே திருமணம் செய்துவைத்தார் அந்த தாய்.
சினிமாவில்தான் இதுபோன்ற காட்சிகள் இடம் பெரும் என்று பார்த்தால், இந்த சம்பவம் சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு இருப்பதாக அனைவரும் கமெண்ட் செய்துவருகின்றனர்.