மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட இப்படியும் ஒரு காதல் இருக்குமா?.. அனைவரும் வியக்கும் வகையில் காதலித்தவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள்..!
சீனாவின் கிழக்கு ஜியாங் பகுதியில் உள்ள நான்சாங் நகரை சேர்ந்தவர் சௌ. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலரை சந்தித்துள்ளார். அவரின் பெயர் ஹூ. பார்த்த முதல் நாளே இருவருக்கும் காதல் ஆரம்பித்துள்ளது. இவர்களின் காதல் தினமும் ஒருவருக்கொருவர் பார்த்து பேசி பழகி, அதன் பின் ஆண்டு நிறைவில் திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுத்துள்ளனர்,
இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்த நிலையில், தான் திருமண செய்து கொள்ளப் போகும் காதலனுக்கு கடன் இருப்பது காதலிக்கு தெரியவந்துள்ளது. ஆனால் அந்த பெண் தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் காதலனின் கடனுக்காக 21 லட்சத்தை அவருக்கு வழங்கியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, தன்னுடைய வருங்கால கணவர் தன்னை பாசமாகவும் அன்பாகவும் பார்த்துக் கொள்வதாகவும், காதலுக்கு காசோ பணமோ முக்கியம் இல்லை என்றும், என்னையும் என் குடும்பத்தையும் அவர் நன்றாக பார்த்துக் கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பணத்தை தனது வருங்கால கணவர் இன்னும் சிறிது நாட்களிலேயே அவர் கஷ்டப்பட்டு உழைத்து நேர்மையாக சம்பாதித்து விரைவில் கடனை அடைத்து விடுவார் என தன்னுடைய காதலியான சௌவிடம் கூறியுள்ளார், இதனால் இவர்களின் புரிதலையும் பெருந்தன்மையையும் கண்டு இவர்கள் இருவருக்கும் இணையதளத்தில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.