மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Lockdown: கொரோனா பரவலால் மீண்டும் ஊரடங்கை கையில் எடுத்த சீனா..! அதிரடி அறிவிப்பு.!
சீனாவில் 17 மில்லியன் மக்கள் வசித்து வரும் நகரில் கொரோனா ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸின் பிறப்பிடமாக சீனாவில் உள்ள வுஹான் சந்தை உள்ளது. கடந்த 2019 ஆம் வருடம் உலகமெங்கும் பரவிய கொரோனா, தனது 3 உருமாற்றத்தை வெளிப்படுத்தி பல நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடியது.
கொரோனா வைரஸால் உலகளவில் 457,405,715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,064,256 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனாவால் 115,466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,636 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனா பரவல் பட்டியலில் தற்போதைய நிலையில் சீனா 124 ஆவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், சீனாவில் உள்ள ஷென்ஜென் நகரத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்நகரில் சுமார் 17 மில்லியன் மக்கள் வசித்து வரும் நிலையில், அந்நகரம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்நகரில் இன்று புதிதாக 66 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அந்நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரேநாளில் ஆயிரத்தை கடந்துள்ளது.