தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
நமக்கு குடிக்கவே தண்ணி இல்ல; ஆனா இங்க மட்டும் என்ன நடக்குது பாருங்க!
சீனாவில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அன்ஹுய், ஜியாங்ஷு, சிச்சுவான் மற்றும் ஷாண்டோங் (அன்ஹுய், ஜியாங்ஷு, சிச்சுவான், ஷாண்டோங்) உள்ளிட்ட மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்தால் எந்தவித தொடர்வும் இன்றி தனித்து விடப்பட்டுள்ளனர். ஜியாங்சி மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில், சுமார் 10 ஆயிரத்து 800 ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன.
மேலும் திரும்பும் இடமெங்கும் வெள்ளகாடாக காட்சியளிப்பதால், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 14 லட்சம் பொதுமக்கள் வெள்ளத்தால் உடமைகளை இழந்து தவித்து வருவதோடு, இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 660 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் கயிறுகளால் வெள்ளத்தில் பாதிப்படைந்த மக்களை இராணுவ மீட்புக் குழு மீட்டுக் கொண்டிருக்கிறது. சில இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டுள்ளது.எனவே இராணுவம் இன்னமும் இப்பகுதியில் முகாமிட்டுக் கொண்டிருக்கிறது மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
SW #China's Huangguoshu Waterfall reaches its peak flow pic.twitter.com/Yo6BOCJt9d
— CGTN (@CGTNOfficial) 9 June 2019