துருக்கியில் வட்டமடித்து சுற்றித்திரிந்த பறவைகள்... நிலநடுக்கத்தை முன்பே உணர்த்தியதா...!



Circling birds in Turkey... did they sense the earthquake in advance...

கடந்த 24 மணி நேரத்தில் துருக்கியில் மூன்று முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 3,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 3,400 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் 5 ஆயிரத்திற்கு அதிகமானோர் காய விருந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 3,400 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததை அடுத்து ஏழு நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என துருக்கிஅரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்படும் முன் பறவைகள் அந்த நகரைச் சுற்றி வட்டமடித்துள்ள காட்சிகள் பரவி வருகின்றன. நிலநடுக்கத்தை உணர்த்தவே பறவைகள் அவ்வாறு பறந்து திரிந்ததாக சமூக வலைதளத்தில் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.