மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மாடல் அழகி பகீர் பாலியல் குற்றச்சாட்டு! தேர்தல் நேரத்தில் பரபரப்பு!
அமெரிக்காவில் வரும் நவம்பர் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்குவதால் ஜனநாயகம் மற்றும் குடியரசு கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ளார். இதனால் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் . இந்த நிலையில் திடீரென மாடல் அழகி ஒருவர் அமெரிக்க அதிபர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 1997 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த டென்னிஸ் தொடரின் போது, டொனால்ட் ட்ரம்ப் அந்நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது டென்னிஸ் போட்டியை காண மாடல் அழகி ஏமி டோரிஸ் ஸ்டேடியத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது டிரம்ப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தனது அனுமதி இல்லாமல் முத்தம் கொடுக்க முயன்றதாகவும் 23 ஆண்டுகள் கழித்து சரியாக அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் புகார் அளித்துள்ளார் மாடல் அழகி ஏமி. இது குறித்து பேசிய டிரம்ப், தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் இவரை ஏவிவிட்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.