மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சோகம்..! தற்கொலைப்படைத்தாக்குதலில், 5 பேர் உடல் சிதறி பரிதாப மரணம்..!
பாரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக உள்ள காங்கோவில், ஆயுதமேந்திய குழுவினர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை போல பயங்கரவாதிகளும் அந்நாட்டு அரசுக்கு எதிராக பல்வேறு தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
அவ்வப்போது கிராமங்களில் புகுந்து தாக்குதல் நடத்தும் கிளர்ச்சியாளர் மற்றும் பயங்கரவாத குழுக்கள், அப்பாவி மக்கள் கொன்று குவித்து வருகிறது. இந்நிலையில், தற்போது காங்கோ நாட்டில் உள்ள பெனி நகரில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்துள்ளது.
பெனி நகரின் மதுபான விடுதி ஒன்றில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்ட நிலையில், அங்கு உடலில் வெடிபொருளை கட்டி வந்த நபர் தற்கொலைப்படை தகுக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு தற்போது வரை எந்த கிளர்ச்சியாளர் அமைப்பும், பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
A suicide bomber killed at least five people at a crowded bar Saturday in the city of Beni, in the eastern Democratic Republic of Congo, local officials said: AFP
— ANI (@ANI) December 26, 2021