மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா அச்சுறுத்தலால் 1ஆம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கர்நாடக அரசு!
கொரோனா வைரஸானது தற்போது இந்தியாவின் பல பகுதியிலும் தீவிரமாக பரவி வருகிறது. அதிலும் பெங்களூரில் வெகுவாக பரவி வருவதால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதுவரை பெங்களூரில் 5க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு நகரம், பெங்களூரு புறநகர் ஆகிய கல்வி மாவட்டங்களில் மழலையர் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், தேர்வையும் ரத்து செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அந்த குழந்தைகளுக்கு முன்பு நடைபெற்ற 2 பருவ தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து, தேர்ச்சி குறித்து முடிவு செய்யப்படும். இந்த முடிவு, பெங்களூருவில் 4 கல்வி மாவட்டங்களை தவிர கர்நாடகத்தின் பிற பகுதிகளுக்கு பொருந்தாது என்று கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் 7 முதல் 9-ம் வகுப்பு வரையில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது. தேர்வு நாளில் மட்டும் அவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும். வருகிற 23-ந் தேதிக்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.