3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
அதிர்ச்சி#: வெறும் 16 நாட்களில் இரட்டிப்பான உயிரிழப்பு.. இரண்டு லட்சத்தை கடந்தது கொரோனா பலி!
கொரோனோவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 16 நாட்களில் ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக அதிகரித்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதல்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனோவால் முதல் உயிர் பலி ஜனவரி 10 ஆம் தேதி பதிவானது. அதன் பிறகு பல்வேறு நாடுகளில் பரவ துவங்கிய கொரோனா வைரசால் அடுத்த 91 நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து ஒரு லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
தற்போது இந்த உயிரிழப்பு இரண்டு லட்சத்தை கடந்து விட்டது. இன்றைய நிலவரப்படி மொத்த உயிரிழப்புகள் 203,289 ஆக உள்ளது. ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக எண்ணிக்கை அதிகரிக்க வெறும் 16 நாட்களே ஆகியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 54,265 , இத்தாலியில் 26,384 , ஸ்பெயினில் 22,902 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா முதலில் துவங்கிய சீனாவில் 4,632 , இந்தியாவில் 825 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.