மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முகத்தை தொட்டே ஒரு வாரம் ஆச்சு..! அமெரிக்க அதிபருக்கே வந்த சோதனை..! பதற வைக்கும் ஸ்டேட்மென்ட்..!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 70 கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 3000 கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவிலும் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பயத்தால், நான் எனது முகத்தை தொட்டே ஒரே வாரம் ஆகிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிண்டலாக கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தீவிர நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அதிபர் ட்ரம்ப் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய ட்ரம்ப், வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார். மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சத்தால் நான் எனது முகத்தை கைகளால் தொட்டே ஒருவாரம் ஆகிறது. நான் அதை மிகவும் மிஸ் செய்கிறேன் என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.