ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
#BigBreaking: ரொனால்டோவின் பச்சிளம் மகன் உயிரிழப்பு.. பெற்றோராக கண்ணீர் ததும்பல்.. ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்..!
ரெனால்டோவின் மகன் உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
கால்பந்தாட்ட விளையாட்டில் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளனர்.
அதில் ஒரு ஜோடி இரட்டை குழந்தைகள் ஆவார்கள். இந்த நிலையில், அடுத்தபடியாக இரட்டை குழந்தைகளுக்கு காத்திருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ரொனால்டோ அறிவிப்பு வெளியிட்டார்.
இப்படியான நிலையில் இன்று ரொனால்டோ தனது மனைவி ஜியோர்ஜியா கையெழுத்துடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "இந்த நாள் எங்களுக்கு மிகவும் வருத்தமான நாள். எங்களின் ஆண்குழந்தை இயற்கை எய்தி விட்டான். ஒரு பெற்றோராக இந்த மரணத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எங்களுக்கு பிறந்துள்ள மகள் அந்த மரணத்தை ஏற்றுக் கொள்ளும் வகையிலான தைரியத்தை கொடுக்கிறார் என்றாலும், ஒரு பெற்றோராக ஒரு குழந்தையை தவிக்க விட முடியவில்லை. மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், பிற மருத்துவ பணியாளர்களுக்கும் எங்களது நன்றிகள்.
நாங்கள் இந்த சூழலில் தனிமையாக இருக்க விரும்புகிறோம். அந்த ஆண் குழந்தையும் எங்களுக்கு தேவதையே. நாங்களும் அவரை மிகவும் காதலிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். இதனால் ரொனால்டோவின் ஆண் குழந்தை இறந்திருப்பது உறுதியாகிவிட்டது.
இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
— Cristiano Ronaldo (@Cristiano) April 18, 2022