மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
13 பள்ளி மாணவிகளை சீரழித்த ஆசிரியருக்கு மரண தண்டனை.! பெற்றோர் மகிழ்ச்சி.!
இந்தோனேசியாவில் பள்ளியில் 13 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து இந்தோனேசிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தோனேசியாவில் இஸ்லாமிய பள்ளியில் 13 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஹெர்ரி வைரவனின் வழக்கு இந்தோனேசியாவை திகைக்க வைத்துள்ளது. குற்ற செயலில் ஈடுபட்ட ஆசிரியர் ஹெர்ரி வைரவனுக்கு முதலில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், அவருக்கு மரண தண்டனை வழங்கக்கோரி வழக்கறிஞர் ஒருவர் பாண்டுங்கில் உள்ள நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஐந்து ஆண்டுகளில், 13 மாணவிகளைப் பாலியல் வன்புணர்வு செய்த 36 வயது ஹெரி வைரவனால் அந்த மாணவிகளில், குறைந்தது எட்டு பேர் கருவுற்றிந்ததாகவும் கூறப்பட்டது.
வழக்கறிஞர்களின் மேல் முறையீட்டை ஏற்றுக்கொண்ட பாண்டுங் நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தங்களுக்கு நீதி கிடைத்துவிட்டதாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.