மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. பேரபாயம்., பரவுகிறது ஜாம்பி நோய்.. உச்சகட்ட எச்சரிக்கை..!
மான்களுக்கு ஜோம்பி நோய் மிக வேகமாக பரவி வருவதால், மக்கள் நோயுற்றிருக்கும் மானை சாப்பிடுவது மற்றும் தொடாமல் இருப்பது நல்லது என்று சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கனடாவில் மான்களை ஒருவிதமான தொற்று நோய் பயங்கரமாக தாக்கி வருகிறது. இந்த ஜோம்பி நோய், கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்வேசன் போன்ற பகுதிகளில் மிக வேகமாக பரவி வருகிறது.ஜோம்பி நோயால் மூளைசெயலிழப்பு தொற்றுநோய் மற்றொரு உயிரினத்திற்கு மிக வேகமாக பரவும்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின்படி, இந்த ஜோம்பி நோய் மான் மற்றும் மான் வகைகளான கலைமான், எல்க், சிகாமான் மற்றும் மூஸ் போன்றவற்றை அதிக அளவில் தாக்குகிறது என தெரிந்துள்ளது. அத்துடன் விலங்குகளுக்கு ஆபத்தான இந்த நோய்க்கு தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சையோ எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
இந்த தொற்று நோயானது முதன்முதலாக அமெரிக்காவில் 1960களில் கண்டறியப்பட்டதாகவும், இந்த நோய் ஓக்லஹோமா, கன்சாஸ், மினசோட்டா, மொன்டானா, தெற்கு டகோட்டா மற்றும் நெப்ராஸ்கா போன்ற இடங்களில் பரவியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜோம்பி நோயால் பாதிக்கப்பட்ட மான்களை சாப்பிடுவதன் மூலமாக, மக்களுக்கும் இது வேகமாக பரவும் என்றும், வேட்டையாடுபவர்களையும் இந்த நோய் பாதிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மனிதர்களுக்கு ஜோம்பி நோய் ஏற்படுவதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை எனவும் கூறுகின்றனர்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் தனது மூளைக்கட்டுப்பாட்டினை முழுவதுமாக இழப்பது மட்டுமின்றி, அதிகப்படியான உமிழ்நீர் மற்றும் அசாதாரண நடத்தை, எடை இழப்பு, அதிகப்படியான சிறுநீர் கழித்தல் போன்றவற்றை வெளிப்படுத்துகின்றன.
இந்த நோய் குறித்து சுகாதார நிறுவனம் கூறியதாவது: ஜோம்பி நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளை முடிந்தவரை மக்கள் உண்ணாமல் இருப்பது நல்லது என்றும், விலங்குகளுக்கு ஆடை அணியும் போது ரப்பர் கையுறைகள் ஆகியவற்றை அணிய வேண்டும் எனவும் கூறியுள்ளது.
அத்துடன் மக்கள் முடிந்த வரை மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், மான்களை சுடாமல் இருப்பது மிகவும் நல்லது எனவும், நோயுற்றிருக்கும் மான்களிலிருந்து சற்று விலகி இருப்பது தொற்று அபாயத்திலிருந்து குறைக்க உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.