ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சட்டென முகத்தில் டீயை ஊற்றிய டெலிவரி பாய்.. அப்பாவி இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி..
தனது முன்னாள் காதலனை பழிவாங்க டெலிவரி மேனை வைத்து இளம் பெண் செய்த காரியம் வைரலாகிவருகிறது.
சீனாவின் ShangDong நகரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனை பழிவாங்க ஒரு திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி ஆன்லைன் மூலம் மிகவும் சூடான டீ ஒன்றை அவரது முன்னாள் காதலரின் முகவரியை கொடுத்து ஆர்டர் செய்த அந்த பெண், அந்த ஆர்டரில் ஒரு குறிப்பு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இந்த டீயை டெலிவரி செய்பவர், இந்த டீயை தனது முன்னாள் காதலின் முகத்தில் ஊற்ற வேண்டும் என ஆர்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து இளம்பெண் குறிப்பிட்டது போலவே டீ-யை எடுத்து வந்த டெலிவரி மேன் அந்த இளைஞரின் முகத்தில் டீயை ஊற்றினார். இதனை சற்று எதிர்பாராத அந்த இளைஞர், என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் ஒரு சீட்டை டெலிவரி மேன் கொடுத்துள்ளார். அதில், தங்களது முன்னாள் காதலி இதை செய்ய சொல்லி குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தான் செய்தது தவறு என்று புரிந்துகொண்ட அந்த டெலிவரி மேன் உடனே துண்டு ஒன்றையும் அந்த இளைஞரிடம் துடைக்க கொடுக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.