அடேங்கப்பா எவ்வளவு ...வயிற்றுவலியால் துடித்த மனநல நோயாளி, பரிசோதனை செய்த மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி,
மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் வயிற்றில் இருந்து 122 இரும்பு ஆணிகளை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எத்தியோப்பிய தலைநகரான அடிஸ் அபாபாவைச் சேர்ந்த 33 வயது நிறைந்த மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் வேறுவலியால் அவதிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றில் ஆணி, கண்ணாடி போன்ற ஆபத்தான பொருத்திகள் இருப்பதை கண்டறிந்தனர்.
பின்னர் மருத்துவர்கள் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து 10 செ.மீ நீளமுடைய 122 ஆணிகள், நான்கு பின்கள், பல் குத்தும் குச்சி உடைந்த கண்ணாடித்துண்டுகள் ஆகியவற்றை வெளியே எடுத்துள்ளனர்.
இரண்டரை மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவர்கள் அந்த ஆணிகள் முதலான பொருட்களை நோயாளியின் வயிற்றிலிருந்து அகற்றினர்.
இதுகுறித்து மருத்துவர் டேவிட் கூறுகையில் ஆணிகளை விழுங்கிய அந்த நபர் தண்ணீர் குடித்து தான் அவற்றை விழுங்கியிருக்கிறார், அதனால்தான் அவை அவரது வயிற்றைக் கிழிக்கவில்லை, அவ்வாறு கிழித்திருந்தால் அவருக்கு மோசமான நோய்த்தொற்று ஏற்பட்டு அதனால் மரணம் கூட ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.
மேலும் மனநலம் பாதிக்கப்பட்டு பல பொருட்களை விழுங்கிய நபர்களை சந்தித்திருந்தாலும் இவ்வளவு பொருட்களை விழுங்கிய ஒருவரை இதுவரை சந்தித்ததில்லை .அந்த நோயாளி குணமடைந்து வருவதாகவும் மருத்துவர் டேவிட் தெரிவித்தார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.