மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பச்சையாக மீன் சாப்பிட்ட 25 வயது இளம் பெண்..! சில நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..! வெளியே வந்த 1.5 இன்ச் நீள புழு..!
இளம் பெண் ஒருவர் பச்சையாக மீன் சாப்பிட்ட நிலையில், மீனுக்குள் இருந்த புழு தொண்டையில் சிக்கிகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் sashimi என்ற வகையை சேர்ந்த மீன் ஒன்றை பச்சையாக சாப்பிட்டுள்ளார். மீன் சாப்பிட சில நாட்களில் அவருக்கு தொண்டையில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் மருத்துவர்களை சந்தித்துள்ளார் அந்த பெண். இதனை அடுத்து மருத்துவர்கள் அந்த பெண்ணின் தொண்டை பகுதியில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது உள்ளே ஒரு புழு உயிருடன் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அந்த பெண்ணிற்கு சிகிச்சை வழங்கப்பட்டு அவரது தொண்டையில் இருந்த புழு வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் கூறியுள்ளார். மேலும், அந்த மீன் சாப்பிட பிறகே தனது தொண்டை வலி வந்ததாக அந்த பெண் மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள மருத்துவர்கள், மீனுக்குள் இருந்த புழு அவரது தொண்டையில் சிக்கி இருக்கலாம் என்றும், அதனாலயே அந்த பெண்ணிற்கு வலி வந்துள்ளதாகவும், இதுபோன்று பச்சையாக மீன்களை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.