மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரபரப்பு வீடியோ காட்சிகள்... முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு..
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபரும், பிரபல தொழிலதிபருமான டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். இதனால் இந்த தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை அமெரிக்க மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி சூடு
அந்நாட்டின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் என்ற இடத்தில், குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப், பொதுமக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் டொனால்ட் ட்ரம்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
உயிர் தப்பிய ட்ரம்ப்
இந்த துப்பாக்கி சூட்டில் வலது காதில் காயம் ஏற்பட்ட நிலையில், ரத்தம் முகத்தில் வழிய டிரம்ப் கீழே அமர்ந்துகொண்டார். உடனே அங்கிருந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்ட நபரை சுட்டு கொன்றனர். மேலும், ட்ரம்ப் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Shooting just happened at The Trump rally pic.twitter.com/Xs1dVL1H3T
— Acyn (@Acyn) July 13, 2024