தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
உச்சகட்ட பரபரப்பில் அமெரிக்கா.! டிரம்பின் டுவிட்டர், இன்ஸ்ட்டாகிராம் கணக்குகள் முடக்கம்.!
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்தது. இதில், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். இந்தநிலையில், ஜோ பைடன் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்கவுள்ளார்.
ஜோ பைடன் வெற்றி பெற்றதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க நாடாளுமன்றம் கூடியது. இதற்கான இரு அவையின் கூட்டுக் கூட்டத்தில், தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில், ஜோ பைடனை அதிபராக அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில், கேபிடால் நகரில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்தபோது போலீசார் துப்பாகி சூடு நடத்தினர். அதில் பெண் ஒருவர் மீது குண்டு பாய்ந்தது.
இந்தநிலையில் டொனால்டு ட்ரம்ப் அவரது ட்விட்டர் பக்கத்தில், “இத்தேர்தல் தங்களிடமிருந்து திருடப்பட்ட ஒரு தேர்தல். இது ஒரு மகத்தான தேர்தல் என்பதை அனைவரும் அறிவர். நமக்கு அமைதி வேண்டும். நாம் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இந்த போராட்டம் பற்றி டிரம்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பல்வேறு பதிவுகள் வெளிவந்தன. இதனால், தொடர்ந்து வன்முறை ஏற்படாமல் தடுப்பதற்காக டிரம்பின் 3 பதிவுகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் டிரம்பின் இன்ஸ்டாகிராம் பக்கமும் 24 மணிநேரம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.