53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
80 வருட பழமை... வேற லெவல் கற்பனை...ஐஐடி பொறியாளரின் கனவு படைப்பு...வைரலாகும் ட்ரீ ஹவுஸ் வீடியோ.!
உதய்பூரை சேர்ந்தவர் குல் பிரதீப் சிங் என்ற ஐஐடி பொறியாளர்.இவர் சுமார் 80 வருடங்கள் பழைமையான மாமரத்தில் அருமையான நான்கு மாடி வீட்டை கட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ட்ரீ ஹவுஸ் என்று அழைப்படும் இவ்வீடானது காட்டில் வசிப்பவர்கள் கட்டுவது போல் மரத்தால் ஆன வீடாக இருக்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். நவீன காலத்திற்கு ஏற்றார் போல் பயங்கர மாடர்னாக ஃபுல் ஃபர்னிஷ்டுடன் கட்டப்பட்டுள்ளது.
அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்ட இவ்வீட்டை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் குல் பிரதீப் சிங், மரத்தின் ஒரு கிளையைக் கூட வெட்டவில்லை என கூறப்படுகிறது.மரக்கிளைகளுக்கு ஏற்ப தன் கனவு வீட்டை வடிவமைத்திருக்கிறார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.