மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்களில் 30 ஆண்டுகளாக சிக்கியிருந்த மரத்துகள்: வயதான பின் தெரியவந்த அதிர்ச்சி தகவல்.!
அமெரிக்காவில் உள்ள வைனே நகரை சார்ந்த 60 வயது முதியவர் சமீபத்தில் கண் பிரச்சனை காரணமாக அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அவரது கண்ணை மருத்துவர்கள் ஆராய்ந்த போது, அதில் 3 மில்லிமீட்டர் அளவிலான சிறிய மரத்துகள் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக முதியோரிடம் விசாரித்தபோது, அவரது 30 வயதில் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மரத்துகள் ஒன்று அவரது கண்ணில் விழுந்துள்ளது. தற்காலிகமாக எடுத்துக்கொண்ட சிகிச்சையில் அது சரியாகி விடவே, அதன்பின் எந்த விதமான வலியும் இல்லை என்பதால் அவர் மருத்துவரை நாடாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து அவரது கண்ணில் பிரச்சனை ஏற்படவே, மருத்துவமனைக்கு சென்றபோது மரத்துகள் கண்களில் சிக்கி இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மரத்துகளை வெளியே எடுத்தனர்.
பொதுவாக இவ்வாறான பிரச்சனை இருந்தால் கண்களில் வலி, அழுத்தம் போன்றவை உணரப்படும். முதியவருக்கு அவை இல்லை என்பதால் அவரும் பெரிதாக அதனை எடுத்து கொள்ளவில்லை. கண்கள் சார்ந்த பிரச்சனையாக இருப்பின் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.