மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்களுக்கு அதிர்ச்சி.. ஒரு முட்டையின் விலை ரூ.32.40.. பாகிஸ்தானில் அதிகரித்த முட்டை விலை.!!
சர்வதேச அளவில் மக்களால் மிகக் குறைந்த விலையில் அணுகி அதிகளவு பயன்படுத்தப்படும் உணவுகளில் முட்டை பிரதான இடத்தை பெற்றுள்ளது. நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பல நாடுகளுக்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.
சமீப காலமாகவே தமிழகத்தில் முட்டையின் விலையானது பல்வேறு நகரங்களில் ஆறு ரூபாய்களை கடந்திருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் ஒரு முட்டையின் விலை இந்திய மதிப்பில் ரூ.32.40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
30 டஜன் முட்டைகளின் விலையானது ரூ.10,000 முதல் ரூ.13,000 வரை உயர்ந்திருக்கிறது. அங்குள்ள கோழிப்பண்ணைகளில் பயன்படுத்தப்படும் சோயாபீன்ஸ் வரத்து குறைந்ததே, அதன் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.