திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வயிற்று வலிக்கு மருத்துவமனை சென்ற கல்லூரி மாணவிக்கு பிரசவம்; கர்ப்பமே தெரியாமல் அதிர்ச்சி.!
இங்கிலாந்தில் உள்ள யார்க்சையர் மாகாணம், லீட்ஸ் நகரை சேர்ந்த 21 வயது கல்லூரி மனைவி நிம்மஹ் ஹெரான் (Niamh Hearn). இவர் கடந்த ஆண்டு வயிற்று வலி காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அவசர ஊர்தி குழுவினரால் அனுமதி செய்யப்பட்டு திடீரென குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி தற்போது மனம் திறந்து, ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான நிம்மஹ் கூறுகையில், "நான் கல்லூரியில் பயின்று வந்த காலத்தில், தினமும் மதுபானம் அருந்துதல், கேளிக்கை விடுதிகளுக்கு செல்வது, புகை பிடிப்பது என இருந்து வந்தேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது ஆண் நண்பரை பார்த்தேன். அவருடன் கேளிக்கை விடுதியில் சந்தித்து பேசுவேன். இருவரும் மதுபானம் அருந்துவோம். எப்படியோ ஒருநாள் இருவரும் எல்லைமீறினோம். அதன் பின் அவரை எனக்கு பிடிக்காமல், நான் அவரிடம் இருந்து விலகிச்சென்றேன்.
ஆனால், நான் கர்ப்பமாக இருப்பதாக நினைத்தே பார்க்கவில்லை. எனது மது, புகை பழக்கத்தால் உடலில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும் என மாதவிடாய் வராத நாட்களில் நினைத்தேன். வயிற்றில் குழந்தை இருப்பதாக நான் உணரவில்லை. ஆனால், சம்பவத்தன்று வயிற்று வலியால் துடித்து, அவசர குழுவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டேன்.
அங்கு நடந்த சோதனையில், நான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்கள். உடனடியாக அறுவை சிகிச்சையும் நிறைவு பெற்று குழந்தையும் பிறந்தது. வயிற்று வலியோடு மருத்துவமனைக்கு சென்று குழந்தையுடன் திரும்பியதை என்னால் இன்றும் மறக்க முடியாது" என கூறினார்.