தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
முஸ்லீம் என்பதால் அமைச்சர் பொறுப்பு வழங்கவில்லை - இங்கிலாந்து பெண் எம்.பி பகீர் குற்றச்சாட்டு.!
இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியின் எம்.பி நஸ்ரத் கனி. இவர் கடந்த 2018 ஆம் வருடத்தில் போக்குவரத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள காஷ்மீரில் பிறந்த நஸ்ரத் கனி, பின்னாளில் இங்கிலாந்தில் குடியேறினார்.
கடந்த 2020 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் போரிஸ் ஜான்சன் தனது அமைச்சரவை மாற்றி அமைத்த போது, நஸ்ரத் கனிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. இந்த விஷயம் தொடர்பாக நஸ்ரத் கனி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில் பகீர் தகவலை ஒரு வருடம் கழித்து தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில், "இங்கிலாந்து அமைச்சரவை மாற்றம் தொடர்பான விவாதத்தில், பாராளுமன்ற கொறடா எனக்கு அமைச்சர் பதவி வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். நான் முஸ்லீம் என்பதால் என்னுடன் பேசவும், கட்சி எம்.பிக்களுக்கு அசௌகர்யமாக இருப்பதாகவும் கூறினார். இதனை வெளியே கூறினால் எதிர்கால அரசியல் வாழ்க்கை பாழாகும் என்றும் சிலர் எச்சரித்தார்கள். இதனால் மௌனமாக இருந்தேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயம் இங்கிலாந்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.