கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிரதமர்! இந்த நேரத்திலும் என்ன கூறியுள்ளார் பாருங்கள்!



England pm affected by corona

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்தநிலையில், கொரோனவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அணைத்தும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்தநிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அவர் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அலுவலர் பேராசிரியர் கிறிஸ் விட்டியின் ஆலோசனைக்கு ஏற்ப பிரதமருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்று இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் கூறுகையில், எனக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. என்னை நானே தனிமைப்படுத்திக்கொள்வேன். நாம் இந்த வைரஸுக்கு எதிராக போராட, காணொளி காட்சி சந்திப்புகள் மூலம் அரசு நடவடிக்கைகளுக்கு தலைமை ஏற்பேன் என அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.