#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொரோனாவை வைத்து பிசினஸ் செய்த கில்லாடி சிறுவன்..! இவன் நம்ம ஊர்ல பிறந்திருக்கவேண்டிய ஆளு..!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், கொரோனாவை வைத்து பள்ளி சிறுவன் பிசினஸ் செய்து சம்பாதித்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
இங்கிலாந்தை சேர்ந்த ஆலிவர் கூப்பர் என்ற 8 ஆம் வகுப்பு மாணவன் தினமும் பள்ளிக்கு கிழம்பும் முன் ரேடியோ கேட்பதை வழக்கமாக வைத்துள்ளான். அப்படி ஒருநாள், கொரோனா வைரஸ் குறித்தும், தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் ரேடியோவில் விழிப்புணர்வு செய்தியை கேட்டுள்ளேன் சிறுவன் ஆலிவர் கூப்பர்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சிறுவன், நேராக மெடிக்கல் ஷாப் ஒன்றுக்கு சென்று 1.6 பவுண்ட் கொடுத்து (147 ரூபாய்), கிருமி நாசினி திரவ பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளான். இதனை அடுத்து, பள்ளிக்கு சென்ற சிறுவன் தான் சுயதொழில் ஒன்றை தொடங்கி இருப்பதாகவும், அனைவரும் மைதானத்திற்கு வருமாறும் தனது வகுப்பு தோழர்களிடம் கூறியுள்ளான்.
இதனை கேட்டு அணைத்து மாணவர்களும் மைதானத்திற்கு செல்ல, அங்கு, அவர்களின் கைகளில் கிருமி நாசினியை ஊற்றி, அனைவரையும் கை கழுவுமாறு கூறியுள்ளான். இதற்காக அணைத்து மாணவர்களிடம் இருந்தும் மொத்தம் ஒன்பது பவுண்ட் (828 ரூபாய்) சம்பாதித்துள்ளான்.
இந்த விஷயம் எப்படியோ பள்ளி நிர்வாகத்துக்கு தெரியவர, கொரோனவை வைத்து பிசினஸ் செய்த குற்றத்துக்காக பள்ளி நிர்வாகம் ஆலிவர் கூப்பரை பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது. என் மகன் நல்லதுதானே செய்தான், இதற்காக பள்ளியில் இருந்து நீக்கலாமா? என சமூக வலைத்தளத்தில் புலம்பியுள்ளார் அவரது தாய்.