திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வெள்ளெலியின் நினைவாக சாம்பலுடன் ஊர் ஊராக சுற்றிவரும் பெண்மணி; வியக்கவைக்கும் காரணம்.!
இங்கிலாந்தில் உள்ள இலண்டனை சேர்ந்த பெண்மணி லிசா முராய் (வயது 47). இவரின் கணவர் வில்லியம் (வயது 66). தம்பதிகளுக்கு திருமணமாகி மகிழ்ச்சியாக தற்போது வரை இணை பிரியாது வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், லிசா தனது வீட்டில் வெள்ளெலி ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். சமீபத்தில் வெள்ளெலி உயிரிழந்துவிட, அதன் மீது பேரன்பு கொண்ட லிசா, வெள்ளெலியின் சாம்பலை தன்னுடன் வைத்து பல இடங்களுக்கு சென்று வருகிறார்.
வெள்ளெலியின் சாம்பலுடன் இங்கிலாந்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வரும் லிசா, வெள்ளெலி உலகை சுற்றிப்பார்க்க மற்றும் வெளியே செல்ல ஆர்வமாகும் இருக்கும் என்பதால், அதன் நினைவாக தற்போது இவ்வாறான பயணம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
தற்போது வரை அவர் வெள்ளெலியின் சாம்பலுடன் கிட்டத்தட்ட 2000 மைல் தூரம் பயணம் செய்திருப்பார். தன் மீது அன்பு வைத்த வெள்ளெலியின் நினைவாக பெண் செய்து வரும் பயணம் பலரையும் வியக்க வைத்துள்ளது.