திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
33 வயதில் 900 கோடிக்கு அதிபதியான பெண்; முன்னாள் பிரதமர் எழுதி வைத்த உயில்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.!
ஐரோப்பியாவில் உள்ள இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பேர்லுஸ்கெனி. கடந்த மாதம் இவர் காலமானார். இவரின் உயிர் தற்போது வாசிக்கப்பட்ட நிலையில், அவர் தனது சொத்தில் ரூ.900 கோடியை (100 மில்லியன் யூரோ) காதலி மர்டா பாசினாவுக்கு (வயது 33) பெயரில் எழுதி வைத்துள்ளார்.
சில்வியோவின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.54 ஆயிரம் கோடி ஆகும். தனது Forza Italia கட்சியின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்த பார்சினாவுடன் கடந்த 2020 முதல் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
தனது மரணப்படுக்கையில் பார்சினவை மனைவி என குறிப்பிட்ட அவர், ரூ.900 கோடி மதிப்பிலான சொத்துக்களை அவரின் பெயரில் எழுதி வைத்து இறந்துள்ளார். தொழிலதிபர், பிரதமர் என இத்தாலிய அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஆதிக்கம் கொண்டிருந்த சில்வியோ, கடந்த ஜூன் 12ல் இரத்த புற்றுநோய் காரணமாக மறைந்தார்.
வெளிநாட்டில் இது சாதாரணம் என்றாலும், 900 கோடி சொத்தை தனது தந்தை காதலிக்கு எழுதி வைத்து உயிரிழந்துள்ளார் என்ற தகவல் அவர்களின் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை தான் ஏற்படுத்தி இருக்கும்.