மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரபரப்பு.. எஃகு சுரங்கத்தில் தீ விபத்து..32 பேர் பலி.!
கஜகஸ்தான் நாட்டில் கோஸ்டென்கோ என்ற இடத்தில் எஃகு சுரங்கம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் வழக்கம்போல் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென்று அதிகளவு தீ ஏற்பட்டு சுரங்கம் முழுவதும் பரவியுள்ளது.
இந்த தீ விபத்தில் சுரங்கத்தில் வேலை செய்து வந்த 32 பேர் உடல் கருகி பலியானதாகவும் மேலும் 18ற்க்கும் அதிகமானோர் காயங்களுடன் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் சுரங்கத்தில் கார்பன் மோனாக்சைடு வாயு பரவியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்தப் பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த தீ விபத்து ஏற்பட்ட எஃகு சுரங்கமானது இந்தியரான லட்சுமி மிட்டலுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.