53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
நூலிழையில் உயிர் தப்பிய பிரபல கிரிக்கெட் வீரர்! மண்டை பிளந்து மருத்துவமனையில் அனுமதி!
ஆஸ்திரேலிய அணிக்காக 15 வருடங்கள் கிரிக்கெட் விளையாடியவர் மேத்யூ ஹைடன். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். 46
வயதாகும் மேத்யூ ஹைடன் மொத்தம் 103 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இதுமட்டும் இல்லமால் சென்னை அணிக்காக ஐபில் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் மேத்யூ ஹைடன். கிரிக்கெட் மட்டுமின்றி சர்ஃபிங் விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார் மேத்யூ ஹைடன். ஓய்வு கிடைக்கும் நேரங்களில் சார்பிங் விளையாட்டிலும் ஈடுபட்டுள்ளர் மேத்யூ ஹைடன்.
இந்நிலையில், குயின்ஸ்லாந்து நகரத்துக்கு அருகில் அமைந்துள்ள ஸ்டார்ப்ரோக் தீவில் தனது குடும்பத்தினருடன் சமீபத்தில் விடுமுறையைக் கழிக்கச் சென்றுள்ளார். அங்கு தனது மகனுடன் சர்ஃபிங்கில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் பிழைத்ததாக தெரிவித்துள்ளார்.
இதனால் கழுத்து மற்றும் முதுகுப்பகுதியில் எலும்பு முறிவு மற்றும் தசைகள் கிழிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனக்கு ஏற்பட்ட விபத்தில் இருந்து விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.