ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் திடீரென பற்றிய தீயால் 7 பேர் உயிரிழப்பு... பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த சோகம்!!
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ரிசல் மாகாணம் டெய்டே நகரில் அமைந்துள்ள மிகவும் நெருக்கமான குடியிருப்பு வீடுகளில் திடீரென தீ பற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 2 வயது பச்சிளம் குழந்தை உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீ பற்றிய நிலையில் அந்த தீயானது கண் இமைக்கும் நேரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் முழுவதும் தீ பரவியுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் வேக வேகமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் இச்சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தெரியவே விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இருப்பினும் தீயில் கருகி 2 வயது பச்சிளம் குழந்தை உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர். இந்த தீ விபத்தால் 60 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடு மற்றும் பொருட்களை இழந்து தவித்து வருகின்றனர்.