விமான நிலையம் மீது குண்டு வீசி தாக்குதல்! லிபியாவில் பயங்கரம்!



Flight attacked in libeya

கடந்த 9 வருடங்களாக லிபியாவில் குழப்பம் நிலவி வருகிறது. அங்கு நடந்த உள்நாட்டு கலவரத்தில், நீண்டகால சர்வாதிகாரியான கடாபியின் ஆட்சியை கலைத்து பின்னர் அவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து கிழக்கு, மேற்கு என்று இரு பிரிவாக லிபியா உடைந்தது. இதனையடுத்து லிபியாவின் தலைநகர் திரிபோலி உள்ளிட்ட மேற்கு பகுதிகள், ஐ.நா. ஆதரவு பெற்ற நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. அந்த நிர்வாகத்தை துருக்கி, கத்தார் ஆகிய நாடுகள் ஆதரிக்கின்றன.

கிழக்குப் பகுதி, ராணுவ உயர் அதிகாரி காலிபா ஹிப்டருக்கு விசுவாசமான படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களை ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து ஆகிய நாடுகள் ஆதரிக்கின்றன. இந்தநிலையில், தலைநகர் திரிபோலியை கைப்பற்றும் நோக்கத்தில், கடந்த ஓராண்டாக கிழக்கு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உலக நாடுகள் வற்புறுத்தியும் அவர்களுக்கு இடையேயான சண்டை நிற்கவில்லை.

Libya
இந்நிலையில், தலைநகர் திரிபோலியில் இயங்கி வரும் ஒரே விமான நிலையமான மிடிகா சர்வதேச விமான நிலையம் மீது கிழக்குப் பகுதி படைகள் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விமானங்கள் சேதம் அடைந்தன. மேலும், இந்த தாக்குதலில் விமான எரிபொருள் கிடங்குகளும் தீப்பிடித்து எரிந்தன. இந்த தாக்குதலுக்கு கிழக்குப் பகுதி படைகள் மீது ஐ.நா. ஆதரவு தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது. குடியிருப்பு பகுதியில் 100 ஏவுகணைகளை வீசியதாக கூறியது.